இலங்கை, சீனாவின் தேசிய கொடிகளுடன் 1,000 ரூபாய் நாணயம் வௌியீடு
இந்த நினைவு நாணயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசிய கொடிகளுடன், தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கின் முன் பக்கத் தோற்றமானது, நாணயத்தின் மத்தியில் காட்சியளிக்கிறது. கலையரங்குக்குக் கீழே பெரிய இலக்கத்தில் 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் "இலங்கை - சீனா 65 ஆண்டுகள்" என்றும் நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் "சீன கம்யூனிஸ்ட் கட்சி" என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
500 தங்க நாணயங்களும் 2000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை, சீனாவின் தேசிய கொடிகளுடன் 1,000 ரூபாய் நாணயம் வௌியீடு
Reviewed by Author
on
July 07, 2021
Rating:
Reviewed by Author
on
July 07, 2021
Rating:


No comments:
Post a Comment