அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய நடவடிக்கை

கொரோனாவிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி காணப்படக்கூடிய கால எல்லை, அதன் தன்மை உள்ளிட்ட விடயங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார். AstraZeneca மற்றும் Sinopharm தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களூடாக இந்த ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

 ஆய்வுகளுக்கு தேவையான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் கொரோனாவிற்கு எதிராக முதல் இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டதன் பின்னரே மூன்றாவது தடுப்பூசி குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். முதல் இரண்டு தடுப்பூசிகளின் செயற்றிறனின் பெறுபேறுகளுக்கு அமையவே மூன்றாவது தடுப்பூசி குறித்து சிந்திக்க வேண்டும் என கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய நடவடிக்கை Reviewed by Author on August 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.