அடுத்த சில வாரங்களில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தடுப்பூசித் திட்டம் நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதோடு, தற்போது நடைமுறையிலுள்ள சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டமானது வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பிற மருத்துவர்களின் ஆதரவுடன் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னிலையில் வகிப்பதாகவும் அவர் கூறினார்.
சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டமானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த சில வாரங்களில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
Reviewed by Author
on
September 28, 2021
Rating:

No comments:
Post a Comment