இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது நோயாளிகளிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இலங்கையில் பிறந்த பெண் மருத்துவருக்கு கடலில் காத்திருந்த விதி
அவர் திரும்பி வராததை நண்பர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தகவல் அறிந்ததும் உயிர் காக்கும் படகுக் குழுவினர், பொலிஸார், தீயணைப்பு படை வீரர்கள் ஹெலிக்கொப்டரின் உதவியுடன் கடலோர காவல்படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதனை தொடர்ந்து திருசிகாவின் உடல் துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
QEQMஇல் மயக்கமருந்து பிரிவில் ஆலோசகராகப் பணியாற்றிய தந்தை சத்தியலிங்கம் தனது மகள் குறித்து உருக்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையே சிறந்தது என நினைக்கின்றனர்.
ஆனால் உண்மையிலே அவள் சிறந்த பிள்ளை என தந்தை தெரிவித்துள்ளார்.
அவளது இறப்பிற்குப் பின்னரே அவள் எவ்வளவு சிறப்பான ஆலோசனைகளை வழங்கினாள், எவ்வளவு புத்திசாலி என்பதை உணர்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மகள் எப்போதும் ஏனையவர்களை செவிமடுக்க தயாராகயிருந்தாள். தனது நோயாளிகளை பராமரிப்பதை அவர்களிற்கு சிகிச்சை வழங்குவதை விருப்பத்துடன் செய்தாள் எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் போது பாதிக்கப்பட்டவர்களிற்கு சுவாசப்பிரிவில் மகள் சிகிச்சை வழங்கினாள் எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.
அவர்களிற்கு ஆறுதல் அளிப்பதற்காக அவர்களின் கையைப் பிடித்தபடி உரையாடிக்கொண்டிருப்பார் எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.
ஏதாவது தவறு என்றால் மருத்துவ ஆலோசகர்களை தொடர்புகொள்வதற்கு மகள் தயங்கியதில்லை. மகள் தனது தொழில் குறித்து ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார் எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.
நண்பர்களால் திரு என அழைக்கப்படும் அவர் இலங்கையில் பிறந்தவர். சிறு வயதில் இல்போர்ட்டில் வாழ்ந்த பின்னர் 2011 இல் கென்டில் வசிக்கத் தொடங்கினார்.
ரொஜெர் மன்வூட்டில் பாடசாலைக் கல்வியை முடித்த அவர் லட்வியாவின் ரிகா ஸ்டிரடின்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்துள்ளார்.அங்கு அவர் தனது காதலனைச் சந்தித்தார். இருவரும் ஆறு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர்.
அதன் பின்னர் அவர் QEQMஇல் பணிபுரியத் தொடங்கினார்.
அவரது சகோதரர் கௌசல்யனும் ஒரு மருத்துவர்.
இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது நோயாளிகளிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இலங்கையில் பிறந்த பெண் மருத்துவருக்கு கடலில் காத்திருந்த விதி
Reviewed by Author
on
September 28, 2021
Rating:

No comments:
Post a Comment