நள்ளிரவு கடந்தும் செல்போனில் பேச்சு: தட்டிக்கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி!
பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர் . இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது . கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது . இதனால் இலக்கியா கடந்த சில மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து குழந்தையுடன் கிருஷ்ணகிரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார் .
மேலும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் , கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார் . அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர் . சிறையில் அடைக்கப் பட்ட அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் .
இதனை அடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன் இலக்கியா குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்து , வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம் என தெரிவித்துள்ளார் . பாலமுருகனும் சமாதானமாகி ஏற்றுக்கொண்டார் .
இதனிடையே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இலக்கியா செல் போனில் நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்துள்ளார் . இதைப்பார்த்த பாலமுருகன் , இந்த நேரத்தில் யாரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என கண்டித்துள்ளார் . இதில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது .
அப்போது ஆத்திரம் அடைந்த இலக்கியா , கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தியுள்ளார் . இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்டு , அவருடைய தாய் ஜோதி ஓடி வந்து இலக்கியாவை தடுத்துள்ளார் . அவரை இலக்கியா தள்ளி விட்டதில் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார் . இதனிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காயமடைந்த பால முருகனை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் . பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது .
இது பற்றிய புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இலக்கியாவை கைது செய்தனர் . விசாரணைக்கு பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர் . இதே போல் இலக்கியா , தன்னை கணவர் பாலமுருகன் குடிபோதையில் வந்து அடித்ததாக எடப்பாடி போலீசில் புகார் அளித்துள்ளார் . இது தொடர்பாக பாலமுருகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது .
பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துக்கொண்ட ஒன்றறை ஆண்டுக்குள்ளேயே கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு நிலவி வழக்கு தொடர்ந்து பின்னர் கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் கணவன் கவலை கிடமாக மருத்துவமனையிலும் , மனைவி கைது செய்யப்பட்டு சிறைவாசம் சென்றதால் இவர்களுக்கு பிறந்த 7 மாத பெண் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியுள்ளது.
நள்ளிரவு கடந்தும் செல்போனில் பேச்சு: தட்டிக்கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி!
Reviewed by Author
on
September 28, 2021
Rating:

No comments:
Post a Comment