அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் பாரம்பரிய முறையில் கனடாவில் நடந்த லெஸ்பியன் திருமணம்!

கனடாவில் Graftonஎன்ற இடத்தில் தமிழ் பாரம்பரிய முறையில் லெஸ்பியன் திருமணம் ஒன்று 26.09.2021அன்று நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து இரண்டு பெண்களின் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். 

 இந்தத் திருமணம் தமிழ் பாரம்பரிய முறையில் நடைபெற்றுள்ளதுடன் ஐயர் அழைக்கப்பட்டு, மந்திரங்கள் சொல்லி நடத்தப்பட்டுள்ளது. இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. கனடாவில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் சட்டபூர்வமாக அங்கீரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதுகுறித்து மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட தம்பதியினருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. புதிய தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்!

தமிழ் பாரம்பரிய முறையில் கனடாவில் நடந்த லெஸ்பியன் திருமணம்! Reviewed by Author on September 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.