அண்மைய செய்திகள்

recent
-

திருக்குமார் நடேசன் ரணிலிற்கு எழுதிய கடிதத்தையும் அம்பலப்படுத்தியது பன்டேரா பேப்பர்

பன்டோரா பேப்பர் திருக்குமார் நடேசன் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிற்கு 2016இல் எழுதிய கடிதத்தையும் தனது ஆதாரங்களின் ஒரு பகுதியாக பகிரங்கப்படுத்தியுள்ளது. திருக்குமார் நடேசன் அக்காலப்பகுதியில் மல்வான பங்களா தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். 

திருக்குமார் நடேசன்கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்படுவதற்கு சிலநாட்களிற்கு முன்னர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். திருக்குமார் நடேசன் தான் அப்பாவி என தெரிவித்து அப்போதைய பிரதமருக்கு கடிதமொன்றை எழுதினார் என ஐசிஜே தெரிவித்துள்ளது. தனது நிலத்தில் பசில் ராஜபக்ச வீடொன்றை கட்டினார் என்பது ஊடகங்களில் வெளிவரும் வரை தனக்குதெரியாது என குறிப்பிட்டுள்ள திருக்குமார் நடேசன் தனது பெயருக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அந்த நிலத்தை விற்பனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 நான் சட்டவிரோத நடவடிக்கை எதிலும் முறையற்ற நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை ஈடுபடவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் எனக்கு நீதி வழங்கவேண்டும் என திருக்குமார் நடேசன் முன்னாள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். என்னுடைய பணப்பரிமாற்றங்கள் வெளிப்படையானவை என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



திருக்குமார் நடேசன் ரணிலிற்கு எழுதிய கடிதத்தையும் அம்பலப்படுத்தியது பன்டேரா பேப்பர் Reviewed by Author on October 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.