அண்மைய செய்திகள்

recent
-

“நீர் மூலகங்களை பாதுகாக்கும்” செயற்திட்டம் மன்னார் லியோ கழகத்தின் ஊடாக முன்னெடுப்பு

மன்னார் நகர பகுதியில் காணப்படும் நீர் மூலகங்களை பாதுகாக்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில் வடிகால்,நீர் கான்களை சுத்தப்படுத்தும் செயற்திட்டம் மன்னார் லியோ கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் நகர சபையின் ஒத்துழைப்புடன் லியோ கழக ஆலோசகர் திருமதி றெஜினா இராமலிங்கத்தின் தலைமையில் இன்று காலை 8 மணி தொடக்கம் இடம் பெற்றது மன்னார் நகர் பகுதியில் அதிகம் நீர் வழிந்தோடும் எமில் நகர் கால்வாய்களில் காணப்படும் குப்பைகள் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை அப்பகுதி மக்களுடன் இணைந்து அகற்றும் செயற்பாடு மேற்படி முன்னெடுக்கப்பட்டது 

 மன்னார் நகர் பிரதேச செயலாளர்,மன்னார் நகரசபை தலைவர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சின்னக்கடை/ சாவற்கட்டு மற்றும் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் ,ஜிம்பிறவுண் நகரில் “RAHAMA” நிறுவனத்தின் உதவியில் நிர்மாணிக்கப்படும் 16 மலசலகூடப் பயனாளிளின் குடும்பத்தினரும், லீயோ கழகத்தினருடன் இணைந்து சிரமதானப்பணியில் ஈடுபட்டதுடன் நீர் வாய்கால்களுக்கு அருகாமையில் கழிவு மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை நீர் நிலைகளில் வீசுவதை தவிர்க்கும் முகமாக தயரிக்கப்பட்ட சுவரொட்டிகளையும் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது








“நீர் மூலகங்களை பாதுகாக்கும்” செயற்திட்டம் மன்னார் லியோ கழகத்தின் ஊடாக முன்னெடுப்பு Reviewed by Author on October 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.