60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு
ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதியைப் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் கே.ஜி.லன்ரோல் தெரிவித்துள்ளார். முதியோரின் வாழ்வுக்காக பணம் திரட்டும் நோக்கில் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் சமூக சேவை அதிகாரியின் தலையீட்டில் இத்திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
இதன்படி புதிதாக சுய தொழில் தொடங்கவுள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கு 30ஆயிரம் ரூபா தொகை வழங்கப்படு வதுடன் சுய தொழிலுக்குத் தேவையான அறிவு மற்றும் பயிற்சி என்பன தனியார் அல்லது குழுக்களால் வழங்கப்படவுள்ளதாகவும் பொன்சாய் கலையில் ஏற்கனவே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொவிட் தொற்றால் அது தடைப்பட்டுள்ளதாகவும் தேசிய முதியோர் செயலக பணிப்பாளர் கூறினார்.
தேசிய பொருளாதாரத்தில் முதியோரை ஈடுபடுத்துவதே இதன் நோக்கம் என அவர் மேலும் கூறினார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு
Reviewed by Author
on
October 06, 2021
Rating:

No comments:
Post a Comment