அண்மைய செய்திகள்

recent
-

பண்டோரா பேப்பர்ஸ் குற்றச்சாட்டு : விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

பண்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்த இலஞ்ச, ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். உடனடியாக விசாரணை நடத்தி, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார். நேற்றைய தினம் (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை உறுதிப்படுத்தினார். 

 பண்டோரா பேப்பர்ஸில் பெயரிடப்பட்டுள்ள ஆவணத்தில் தற்போதைய இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் இல்லை என்றும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். மேலும் குறித்த ஆவணம் இலங்கை தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியுடன் மட்டுமே தொடர்புடையது என்றும் அவர் கூறினார். முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான திருக்குமார் நடேசன் ஆகியோர் அதில் பெயரிடப்பட்டுள்ளனர். நிருபமா ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டோரா பேப்பர்ஸ் குற்றச்சாட்டு : விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு Reviewed by Author on October 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.