மன்னார் பிரதேச சபை தவிசாளரின் தலையீட்டினால் மழை நீர் வெளியேற்றுவதற்கான ஏற்பாடு
இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(19) குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் சாகுல் ஹமீது முகமது முஜாஹிர் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில் மழை நீர் வெளியேறுவதற்கான தற்காலிக ஏற்பாட்டை மன்னார் பிரதேச சபை தவிசாளர் மேற்கொண்டுள்ளார்
அதே நேரம் வெள்ளப்பாதிப்புக்கள் நிறைந்த பகுதிகளுக்கு மன்னார் பிரதேச சபை தலைவர் உடனடியாக விஜயம் மேற்கொண்டதுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளப்பாதிப்பு காணப்படும் பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீர் தற்காலிகமாக வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வீதியையும் சீரமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
அதே நேரம் மன்னார் பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தற்காலிகமாக வடிந்தோடுவதற்கான வடிகால் அமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மழை நீர் கடலுடன் கலப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பிரதேச சபை தவிசாளரின் தலையீட்டினால் மழை நீர் வெளியேற்றுவதற்கான ஏற்பாடு
Reviewed by Author
on
November 19, 2021
Rating:

No comments:
Post a Comment