பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை
இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் அனைத்து கல்வி நிர்வாகப் பிரிவினரும் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் ஒரு வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உள்ள நிர்வாகப் துறையினர் சேவைக்கு சமூகமளிப்பது கட்டாயம் இல்லை என்பதுடன் வேறு நோய்த்தாக்கத்திற்குள்ளானவர்கள் அவசியமான நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை உரிய ஆவணங்களுடன் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் பாடசாலை சீருடை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பொருத்தமான உடையில் பாடசாலைக்கு வருவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை
Reviewed by Author
on
November 03, 2021
Rating:
No comments:
Post a Comment