அண்மைய செய்திகள்

recent
-

திருக்கார்த்திகை திருநாள்

திருக்கார்த்திகை திருநாள் இன்றாகும் (18). தமிழ் மக்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் கலந்தது திருக்கார்த்திகை. சிவபெருமான், முருகன், விஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கார்த்திகை மாதம் விளங்குகின்றது. சிவபெருமான் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக எழுந்தருளிய தினமே திருக்கார்த்திகை நாள்.

 திருக்கார்த்திகை அன்று ஈசன் தன் உடலில் பாதியை அம்பிகைக்கு வழங்கி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியருளினார். கார்த்திகை விழாவை குமராலய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக பிரித்து ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர். எனவே இந்த நன்நாளில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி இறைவனை ஜோதி ரூபமாக வழிபடப்படுகின்றது.




திருக்கார்த்திகை திருநாள் Reviewed by Author on November 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.