அண்மைய செய்திகள்

recent
-

2021 ஆம் ஆண்டு பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான புதியதிகதிகள் பரீட்சை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 அத்துடன், க.பொ.த. சாதாரணதர பரீட்சையை மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 06 மாதங்களின் பின்னர், 5 ஆம் தரப் புலமைப்பரிசில் மாணவர்களுக்காக கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்காக எதிர்வரும் 08 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. 

 அதற்கமைய, பரீட்சைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கபட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு பரீட்சைகளை நடாத்துவதற்கான திகதிகள் கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டு பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு Reviewed by Author on November 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.