அனைவருக்கும் நியூமன்னார் இணைய குழுமத்தின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
துவாபரயுகத்தில் கொடுங்கோலோச்சிய கம்சன், நரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்வதற்காக பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் ஆயர் குடியில் கிருஷ்ணராய் அவதரித்தார்.
பாண்டவர்களின் தோழராய், பார்த்திபனின் சாரதியாய், குருசேத்திரத்தில் மகாபாரதப் போரை வழிநடத்திய கண்ணபிரான் அன்று தர்மத்தை நிலைநாட்டினார்.
வரங்கள் பல பெற்று மக்களை துன்புறுத்திய நரகாசுரனையும் கிருஷ்ண பரமாத்மா சம்ஹாரம் செய்து மக்களுக்கு வாழ்வளித்தார்.
நரகாசுரனுக்கு அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் கைகூடியதை நினைவுகூரும் நோக்கில் தீபத்திருநாளன்று இல்லங்களும் கோவில்களும் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
இந்தியா, இலங்கை, நேபாளம், மியன்மார், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
ஒளி கண்டகலும் இருள் அரக்கன் போல், உள்ளங்கள் கொண்ட ஆணவமும் அகந்தையும் அகன்று, ஞானமும் கருணையும் ஒளிவீசிட அனைவருக்கும் நியூமன்னார் இணைய குழுமத்தின் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் நியூமன்னார் இணைய குழுமத்தின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Reviewed by Author
on
November 04, 2021
Rating:
No comments:
Post a Comment