இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுடன் நாட்டில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
 கடந்த ஒரு மாதத்திற்குள் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டவர்கள் மற்றும் வௌிநாட்டிற்கு சென்று வந்த இலங்கையர்கள் தொடர்பான தரவுகள் கேசரிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமித் கினிகே கூறினார்.
அவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, நைஜீரியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த இலங்கையர் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமித் கினிகே குறிப்பிட்டார்.
குறித்த நபர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரின் குடும்ப உறுப்பினர்களையும் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
 இதேவேளை, ஒமிக்ரோன் பிறழ்வை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாதிரிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினை கேந்திரமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுடன் நாட்டில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
 
        Reviewed by Author
        on 
        
December 03, 2021
 
        Rating: 
      

No comments:
Post a Comment