பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற புதிய சட்ட மொன்று அதனை பிரதியீடு செய்ய வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
2021 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட பொது அறிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாத வலுவான மற்றும் பயனுள்ள தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க உறுதி பூண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலைப்பாடு ஐயத்திற்கு இடமின்றி ஐக்கிய மக்கள்சக்தியினால் பாதுகாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பயங்கரவாத தடைச் சட்டம் 1979 ம் ஆண்டு ஆறு மாத காலத்திற்கு தற்காலிக ஏற்பாடுகள் என பிரகடனப் படுத்தப்பட்டதை நாங்கள் நினைவு கூர்கின்றோம்.
ஆனால் இந்த சட்டம் இலங்கையின் சட்டப் புத்தகங்களில் 43 வருடங்களாக உள்ளது.பயங்கரவாத தடைச்சட்டம் பாரிய பலவீனங்களை கொண்டுள்ளது என்பதும் மீள முடியாதது என்பதும் எங்கள் நம்பிக்கையாகும்.
இந்த பலவீனங்களால் அரசியல் எதிரிகள்,ஊடகவியலாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் சட்டத்தரணிகள் துன்புறுத்தப் படுவதற்கு வழிவகுக்க படுகிறது.
உண்மையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது.
அரசியலமைப்பு மற்றும் பொதுச்சட்டத்தின் மூலம் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறித்தெடுத்து அரசாங்கத்தின் நிறைவேற்றதிகார த்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்குவதால் பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையின் சுதந்திரமான நீதித்துறை க்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது என நாங்கள் நம்புகிறோம்.
உதாரணமாக பொதுச்சட்டத்தின் கீழ் நீதவான் ஒருவரிடம் மாத்திரம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்க முடியும் ஆனால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அளிக்க முடியும்.
அது மட்டுமின்றி பொதுச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர் ஒருவரின் பிணை விண்ணப்பத்தினை பரிசீலிக்கும் அதிகாரம்,வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு உள்ளதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிக்கும் நீதிபதி அந்த அதிகாரத்தை இழக்கின்றார்.
அரசியலமைப்பின் வரம்பிற்குள் பொருத்தமான முடிவுகளை எடுக்கும் நீதித்துறை அதிகாரிகளின் தகுதி மற்றும் திறன் மீதான தேவையற்ற மற்றும் முற்றிலும் அரசமைப்பிற்கு எதிரான அவ நம்பிக்கையை இந்த ஏற்பாடுகள் பிரதிபலிக்கின்றன.
பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் எவற்றையும் நிவர்த்தி செய்யவில்லை என்பதையும் நாம் காண்கின்றோம்.
எனவே ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறு முன்மொழியப்பட்ட திருத்தங்களை முற்றாக நிராகரிக்கின்றது.பயங்கரவாத தடைச் சட்டத்தை இவ்வாறான பூச்சு வேலைகள் மூலம் சீர் படுத்த முடியாது என்பதே எங்களின் நிலைப்பாடாகும்.
இது இல்லாதொழிக்கப்பட்டு அதற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை ஆக்க திறன் வாய்ந்ததாக சமன்படுத்தும் சட்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்.
2021 ம் ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய மக்கள் சக்தி தனது பொது அறிக்கையில் சாத்தியமான நிரந்தரமான தீர்வுகளை வழங்காமல் தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகளை மாத்திரம் சுட்டிக்காட்ட விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான முதற்படியாக இலங்கை சட்டத்துறையின் புகழ்பெற்ற உறுப்பினர்களின் அமைப்பான இலங்கை சட்ட ஆணைக்குழுவின் 2016 ஆம் ஆண்டு பரிந்துரைக்கு ஏற்ப அவை நிறுவப்பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற புதிய சட்ட மொன்று அதனை பிரதியீடு செய்ய வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
Reviewed by Author
on
March 10, 2022
Rating:
No comments:
Post a Comment