இனியும் NATO-வில் சேர விரும்பவில்லை: உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு
எனவே, NATO அமைப்பில் எங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள் என்ற எங்களின் கோரிக்கைக்கு இனியும் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. இனி NATO நாடுகள் அமைப்பில் சேர விரும்பவில்லை. மண்டியிட்டு எதையாவது தானமாக பெறும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க நான் விரும்பவில்லை. ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் உள்ள 2 பிரிவினைவாத குழுக்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி உள்ளார். அந்த குழுக்கள் தொடர்ந்து எங்களுடன் போரிட்டு வருகிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் உக்ரைனின் பகுதியாக வாழவே ஆசைப்படுகிறார்கள். ரஷ்யாவை தவிர வேறுயாரும் இக்குழுக்களை அங்கீகரிக்கவில்லை. அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு குறித்த உத்தரவாதம் வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் இப்பிரச்சினைகள் குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்.
என உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இனியும் NATO-வில் சேர விரும்பவில்லை: உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு
Reviewed by Author
on
March 09, 2022
Rating:
No comments:
Post a Comment