பிரதமருக்கு எதிராக யாழில் போராடவந்த மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை: யாழில் பரபரப்பு !!
அதில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவில் இருந்து பேருந்தில் வருகைதந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகில் பொலிஸார் வழிமறித்துள்ளனர்.
அத்தோடு வாகனத்தில் இருந்து எவரையும் இறங்க விடாதவாறு, வாகனத்தின் இரு வாசல்களிலும் காவலுக்கு நின்ற பொலிஸார் சாரதியையும் கடும் விசாரணைக்கு உட்படுத்தினர்.
இருப்பினும் பேருந்தில் இருந்து கீழிறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேவேளை, மத்திய நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக யாழில் போராடவந்த மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை: யாழில் பரபரப்பு !!
Reviewed by Author
on
March 20, 2022
Rating:

No comments:
Post a Comment