அண்மைய செய்திகள்

recent
-

பசில் ராஜபக்ஷ நிதியமைச்சின் செயலாளருடன் இந்தியா பயணம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர்கள் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 பெற்றோலியப் பொருட்களுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. குறித்த 500 மில்லியன் டொலரில் 75 வீதமானவை இந்தியாவிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்காக பயன்படுத்த வேண்டுமென இந்திய EXIM வங்கி குறித்த ஒப்பந்தத்தின் பிரதான நிபந்தனையாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

பசில் ராஜபக்ஷ நிதியமைச்சின் செயலாளருடன் இந்தியா பயணம் Reviewed by Author on March 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.