ஏலியன்ஸ் பூமியில் இருக்கிறார்கள் : அதிர்ச்சியை கிளப்பும் பேராசிரியர் - என்ன நடக்கிறது?
மேலும் அவை மனிதர்களது சிந்தனையைக் கட்டுப்படுத்தி பொது மக்களை ஒரு சமூகமாக கையகப்படுத்துவதற்குத் தயாராகின்றன என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
இவர் 1970 களிலிருந்து வேற்றுக்கிரக வாசிகள் குறித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார். Extraordinary: The Revelations எனும் ஆவணப்படம் சென்ற ஆண்டு வேற்றுக்கிரக வாசிகள் குறித்து வெளிவந்திருக்கிறது. இது யூஎஃப்ஓ ஆதரவாளர்களிடம் பிரபலமாகப் பேசப்பட்ட படம்.
UFO
UFOTwitter
இந்த ஆவணப்படம் குறித்து டாக்டர் ஜேக்கப் கூறும்போது, மனிதர்கள் உலகம் முழுவதும் பரவி நம்மால் முடிந்தவரை வெற்றி பெற்றுள்ளோம். இது மற்ற உயிரினங்களுக்கு உண்மையா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் மனிதர்களின் வெற்றி என்பது உண்மைதான். இதையேதான் வேற்றுகிரகவாசிகளும் செய்கிறார்கள். இது எனது ஆழமான யூகம் என்கிறார்.
வேற்றுக்கிரக வாசிகளால் கடத்தப்பட்டுத் தப்பிய பலரைப் பேட்டி கண்டதாக அவர் கூறுகிறார். எதிர்காலத்தில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய வேலை இருக்குமென்று வேற்றுக் கிரக வாசிகளால் கூறப்பட்டது என்கிறார். கடத்தப்பட்டவர்களில் பலர் மக்களைக் கட்டுப்படுத்தும் செயலை வேற்றுகிரகவாசிகள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஏலியன்ஸ் எப்படி இருப்பார்கள் என்று டாக்டர் ஜேக்கப் கூறும் போது வேற்றுக்கிரக வாசிகள் மனிதர்களைப் போன்றே இருந்ததாகக் கடத்தப்பட்டவர்கள் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
கடத்தப்பட்டவர்கள் விவரிப்பது என்னவென்றால் விண்வெளிக் கப்பலிலிருந்தவர்கள் பார்ப்பதற்கு மனிதர்களாகத் தோன்றியவர்கள் கீழே வந்து நம்மிடையே கலப்பது, மனிதர்களாக இருப்பது எப்படி என்பதை அறிய முயல்கிறார்கள் என்கிறார் பேராசிரியர்.
இந்தக் கட்டத்தில் அவர்கள் சமூகத்தில் கலந்து கட்டுப்படுத்துவதைச் செய்வார்கள்.
அவர்கள் நம்மைக் கட்டுப்படுத்துவது போல நம்மால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் அவர்.
சரியாகச் சொல்வதாக இருந்தால் அவர்கள் நம்மை விடத் திறமை வாய்ந்த சூப்பர் மனிதர்கள்.
அவர்கள் நோக்கத்தில் வெற்றிபெறுகிறார்களோ இல்லையோ ஆனால் அவர்களால் மனித சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் என்ன நடக்குமென்பது தெரியாது, அதன் பிறகு மோசமானதை பேராசிரியர் ஜேக்கப் கூறுகிறார்.
இதை யூஎஃப்ஓக்கள் முன்பே செய்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால் அறிவியல் உலகம் இத்தகைய வேற்றுக்கிரக வாசிகளின் பூமி வருகை என்பது சிலரது கற்பனை என்பதைத் தொடர்ந்து கூறிவருகிறது. வேற்றுக்கிரக வாசிகளது வருகைக்கும் இருப்புக்கும் இதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
கார்ல் சாகன், சூசன் கிளான்சி மற்றும் மார்ட்டின் கார்ட்னர் போன்ற அறிவியலாளர்கள் ஜேக்கப் மற்றும் பிற யூஎஃப்ஓ ஆதரவாளர்கள் சொல்லும் வேற்றுக்கிரக வாசிகளின் கடத்தல் முறைகளை விமர்சித்துள்ளனர்.
தான் ஒரு வேற்றுக்கிரவாசியால் கடத்தப்பட்டதாக ஒருவர் நினைப்பது தான் பார்த்தது அல்லது அடைந்த அனுபவங்கள் ஏதோ ஒன்றைத் தவறான அடையாளத்துடன் தவறான நினைவாற்றல் காரணமாக நம்புவது என்கிறார் கார்ல் சாகன்.
ஹிப்னாடிஸ்டுகள் நோயாளியை வழிநடத்தும் போது தூக்கத்தில் ஆழ்த்திப் பேசவைப்பார்கள். அதைப்போன்றதொரு அனுபவத்தை வைத்து வேற்றுக்கிரகவாசிகள் கடத்துகிறார்கள் என்று சொல்வது சரியல்ல என்கிறார் கிளான்சி.
பேராசிரியர் ஜேக்கப் உளவியல், மனநல மருத்துவம், அல்லது ஹிப்னோதெரபியில் எந்தப் பயிற்சியும் பெறவில்லை.
என்றாலும் ஹிப்னாடிசத்தைப் பயன்படுத்தி அப்படி ஒன்று நடக்கவில்லை என்றாலும் பலர் வேற்றுக்கிரக வாசிகளால் கடத்தப்பட்டதான நினைவுகளை உருவாக்கத் தூண்டுகிறார் என்று கார்ட்னர் கூறுகிறார்.
கிட்டத்தட்ட ஐம்பது இலட்சம் அமெரிக்கர்கள் குறைந்தபட்சமாக ஒரு முறையாவது வேற்றுக்கிரக வாசிகளால் கடத்தப்பட்டுள்ளனர் என்று ஜேக்கப் நம்புகிறார். நல்லது, வேற்றுக்கிரக வாசிகள் ஏன் அமெரிக்கர்களை மட்டும் கடத்துகிறார்கள், மற்ற கண்டத்து மனிதர்கள் அவர்களது தரத்தில் வரவில்லையா என்ற எளிய கேள்வி எழுகிறது.
அமெரிக்காவில் இத்தகைய அமானுஷ்ய விசயங்களை நம்புவதற்கு என்றே பெருங்கூட்டம் இருக்கிறது. எனவே சந்தையின் தேவை இத்தகைய அறிவியலுக்கு விரோதமான கருத்துக்களை உருவாக்குகிறது. சந்தையும் ஆரோக்கியமாக இல்லை.
ஏலியன்ஸ் பூமியில் இருக்கிறார்கள் : அதிர்ச்சியை கிளப்பும் பேராசிரியர் - என்ன நடக்கிறது?
Reviewed by Author
on
April 06, 2022
Rating:

No comments:
Post a Comment