இலங்கைக்கு கடத்த முயன்ற 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப் பொருள் மீட்பு.
மெரைன் போலீஸார், க்யூ பிரிவு போலீஸார், மத்திய வருவாய்ப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டும், கடத்தப்படும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இருப்பினும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி, முள்ளக்காடு கடற்கரையில் இருந்து படகின் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், முள்ளக்காடு கடற்கரையில் இன்று சோதனையிட்டனர்
இதன் போது கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகில் 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட ஐஸ் போதைப் பொருள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
நிறுத்தப்பட்டிருந்த படகில் ஆட்கள் யாரும் இருக்கவில்லை.
இதன் போது மீட்கப்பட்ட 5 கிலோ 600 கிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் பாக்கெட்டுகளையும்,கடத்தலுக்குப் பயன்படுத்திய படகினையும் பறிமுதல் செய்துள்ளனர்.
படகின் உரிமையாளர் மற்றும் கடத்தலில் ஈடுபட முயன்றவர்களை தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதே மதிப்பு .15 கோடி என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இலங்கைக்கு கடத்த முயன்ற 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப் பொருள் மீட்பு.
Reviewed by Author
on
April 06, 2022
Rating:

No comments:
Post a Comment