அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் முடக்கப்படுகின்றன சமூக ஊடகங்கள்?

தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மிரிஹானவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 

 சமூக ஊடகங்கள் ஊடாக மேலும் வன்முறையைத் தூண்டினால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, “சமூக ஊடகங்கள் மூலம் வன்முறைச் சம்பவத்தைச் செய்ய ஏதேனும் உந்துதல் அல்லது தூண்டுதலின் ஆபத்து இருந்தால், தற்​போது உள்ள சட்டத்தின்படி செயல்பட வேண்டி ஏற்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முடக்கப்படுகின்றன சமூக ஊடகங்கள்? Reviewed by Author on April 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.