அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெறும் -பொதுக்கட்டமைப்பு

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் இம்முறையும் சிறப்புற இடம்பெறும் என வட கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ அடிகளார் தெரிவித்துள்ளார் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் இனஅழிப்பின் 13வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இவ் வருடம் மே மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் எமது செய்திப்பிரிவு அருட்தந்தை அவர்களை தொடர்புகொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

 ஒவ்வொரு வருடங்களிலும் இடம்பெறுகின்ற நினைவேந்தலை போன்று இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு வடகிழக்கு நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அதற்கான ஆயத்த பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் எதிர்வரும் மே 18 ஆம் திகதி தமிழின அழிப்பின் உடைய 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் இடம்பெறும் என அருட்தந்தை தெரிவித்திருக்கின்றார் 

 இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்துக்கு அருகில் இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு புலனாய்வாளர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடக்கி விடப்பட்டுள்ளது இதேவேளை பொலிசாரும் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கான ஏற்ப்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது









முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெறும் -பொதுக்கட்டமைப்பு Reviewed by Author on May 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.