அண்மைய செய்திகள்

recent
-

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பான அறிவித்தல்

ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(17) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

தற்காக, www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, கடவுச்சீட்டிற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படும் மற்றும் கடவுச்சீட்டுக்களின் கையிருப்பு முடிவடைவதாக பரவும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பான அறிவித்தல் Reviewed by Author on May 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.