அண்மைய செய்திகள்

recent
-

பிரதமராக ரணில் பதவியேற்றதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே முக்கிய நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹினி கவிரத்னவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. 

 பிரதி சபாநாயகர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். மேலும், நாளை மேலும் இரண்டு நாடாளுமன்ற வாக்கெடுப்புகள் நடைபெறவுள்ளன. அதன்படி, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான பிரேரணை மற்றும் ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு என்பன நடைபெறவுள்ளன. இதேவேளை, நாடாளுமன்ற ஆசனங்களிலும் இன்று மாற்றம் இடம்பெறவுள்ளது. அதன்படி, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) உயர்மட்ட பிரதமர் ஆசனம் வழங்கப்படவுள்ளது.


பிரதமராக ரணில் பதவியேற்றதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று! Reviewed by Author on May 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.