மரபு வழிவந்த கதையினை திரிவுபடுத்துவதும் கலை கலாச்சாரத்தினை அழிப்பதும் அரசின் திட்டமிட்ட செயல்-என்.எஸ்.மணியம்!
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் தொன்று தொட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாக கோவலன் கண்ணகி என்ற நாட்டுக்கூத்து மேடை ஏறிவருகின்றது அண்மைகாலத்தில் போருக்கு பின்னர் இந்த கூத்து இரண்டாக பிளவு பட்டு இரண்டு அணியினரிடம் இந்த கூத்தினை ஆலய நிர்வாகம் ஒப்படைத்திருந்தது.
ஒருஅணி கலைத்தாய் நாடாக மன்றத்திற்கும்,மற்றைய அணி காட்டுவிநாயகர் நாடகமன்றத்திற்கும் ஆலய நிர்வாகத்தினால் பிரிக்கப்பட்டு ஆண்டொன்றிற்கு ஒருஅணியினர் கூத்து அரங்கேற்ற வேண்டும் என்று ஒப்படைத்துள்ளார்கள்.
அதன்படி இந்தமுறை 2022 கூத்து கலைத்தாய் நாடகமன்றத்திற்கு உரியது. கூத்திற்குரிய ஆயத்தங்களை செய்தவேளை காட்டுவிநாயகர் நாடகமன்றமும்,கலைத்தாய் நாடக மன்றமும் இணைந்து கூத்தினை நடத்த சமூகத்தவரின் அழைப்புபின் பெயரில் இணக்கம் காணப்பட்ட வேளை கலைஞர்களை தெரிவுசெய்வதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வந்தவேளை இன்னுமொரு புதிய அணிஒன்று கூத்தினை போடுவதற்கு உருவாகியுள்ளது.
அந்த அணி காட்டுவிநாயகர் ஆலய நிர்வாகத்திடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்தார்கள் இன்னிலையில் ஆலய நிர்வாகம் கூடியவேளை கலைத்தாய் நாடக மன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை மற்றைய இருகலைஞர் அணிகளும் கூடியவேளை செங்குந்த சமூக சங்கம்தான் இதனை பொறுப்பெடுத்து செய்யவேண்டும் என சங்கத்தின் தலைவர் கனகரத்தினம் அவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கூத்தில் நடிப்பவர்களின் பாத்திரங்கள் தெரிவு இடம்பெற்ற போது அண்ணாவியார் பாலசுந்தரம் அவர்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது குழப்பிவிட்டு சென்றுவிட்டார்.
முல்லை மணி அவர்கள் எழுதிய பண்டாரவன்னியன் நாடகம் எங்கள் மரபுவழிவந்த கதை இதனை திரிவுபடுத்தி வன்னியில் பலர் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள் இது அரசின் திட்டமிட்ட செயல் தமிழர்களின் இருப்பினை காலாச்சாரத்தினை அழிப்பதற்கு ஒரு பக்கத்தில் நடந்துகொண்டிருக்கின்றது
அதோபோல்தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற எங்கள் பாரம்பரிய நாட்டுக்கூத்து கலைகளை இல்லாமல் செய்வதற்கு இப்படியானவர்கள் ஊடுருவிக்கொண்டிருக்கின்றார்கள் என்றுதான் நான் கருதுகின்றேன்.
என்.எஸ்.மணியத்தினை போல் ஒரு கூத்து வடிவத்தினை முன்னெடுத்ததில் எனக்கு நிகராக இங்கு யாரும் இல்லை இதனை புரிந்துகொண்டும் என்னை புறந்தள்ளுவதற்காக திட்டமிட்டிருக்கின்றார்கள்.
இவர்கள் எல்லாம் கலையினை அழிப்பதற்கு என்று ஏதோஒரு பக்கத்தில் செயற்படுகின்றார்கள் போல் எனக்கு தெரிகின்றது.
இவ்வாறு வளரவிட்டால் காலக்கிரமத்தில் எங்கள் கலைகள் அழிந்து போய்விடும் எங்கள் பாரம்பரியங்கள் இல்லாமல் போய்விடும் பாரம் பரிய உடைஅலங்காரம் இந்த மண்ணில் இருந்தது இந்திய அமைதிப்படையினரின் வருகைக்கு முன்னமே இந்த பாரம்பரிய வில்லுடைகள் அழிந்துவிட்டன கூத்தில் முல்லை மோடி என்று சொல்லப்படுகின்றதற்கான ஆதாரம் கூட அழிந்துவிட்டன.
நான் சிறுவயதில் இருந்து கூத்தில் ஈடுபட்டவன் என்ற படியால் அழிந்த வில்லுடைகளை கட்டிக்காத்து அதனைவடிவமைத்து இன்று இந்த சந்ததியிடம் கொடுத்தவன் நான்தான் நான் அதை கண்டுபிடிக்காமல் தயாரிக்காமல் விட்டிருந்தால் இந்த கூத்தும் இல்லை இந்த உடைஅலங்காரமும் இல்லை.
ஊடை அலங்காரத்தில் ஒத்த வடிவமைப்பில் யாரும் உடையினை தயாரிக்கலாம் ஆனால் அந்த அலங்காரங்கள் அந்த திராவிடக் கலைகள் மாறக்கூடாது இதில் ஒவ்வொருதரும் கவனமாக இருக்கவேண்டும்.
முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் மூன்றிற்கு மேற்பட்ட வட்டக்கலரி கூத்துக்கள் அரங்கேறி இருக்கின்றன.
கோவேந்தன் கூத்து,கன்னன் கூத்து,கோவலன் கூத்து, இந்த கூத்து எல்லாம் அழிந்து போய்விட்டது இதன் பின்னர் பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்தினையும் இந்த மண்ணில் அடுத்த சந்ததிக்கு நான் கொடுக்கவேண்டும் என்பதற்காக கஸ்ரப்பட்டு நான் பழக்கிக்கொண்டிருக்கின்றேன்.
கலைப்பயணத்தில் எனக்கு கிடைத்த அத்தனை விருதுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிடைத்து எனவே எனது கலைத்தாய் நாடகமன்றத்திற்கு முள்ளிவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் நடைபெறும் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்தினை கொண்டு நடத்துவதற்கு என்னை புறந்தள்ளியுள்ளமை மிகவும் வேதனையாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மரபு வழிவந்த கதையினை திரிவுபடுத்துவதும் கலை கலாச்சாரத்தினை அழிப்பதும் அரசின் திட்டமிட்ட செயல்-என்.எஸ்.மணியம்!
Reviewed by Author
on
May 23, 2022
Rating:

No comments:
Post a Comment