மல்லாவி ப்ரீமியர் லீக் போட்டித் தொடர் சம்பியனானது Barathi Raiders
வீரர்கள் ஏல முறையில் தெரிவுசெய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் 20 ம் திகதியன்று ஆரம்ப நிகழ்வுகளுடன் வெகு விமர்சையாக ஆரம்பமானது.
இத் தொடரானது 15 ஓவர்களை கொண்ட 30 லீக் போட்டிகள் வைக்கப்பட்டு அதில் புள்ளிப் பட்டியலில் உள்ள முதல் 4 அணிகளையும் தெரிவுசெய்து 20 ஓவர்களை கொண்ட Qualifier-1 , Eliminator மற்றும் Qualifier-2 ஆகிய தெரிவுப்போட்டிகள் நடைபெற்று ( IPL முறை ) போட்டித் தொடர் இறுதிக்கட்டதை எட்டியிருந்த நிலையில்
Qualifier -01 போட்டியில் வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு Barathi Raiders அணி தெரிவாகி உள்ளதுடன் Eliminator, Qualifier -02 ஆகிய போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று Alankulam Kings அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி உள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இரு லீக் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்ற நிலையில் நேற்று 22 ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பான மாபெரும் இறுதிப்போட்டியில் Barathi Raiders சம்பியனாகியுள்ளது
நிகழ்வின் அதிதிகளாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா,முன்னாள் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வல்லிபுரம் கமலேஸ்வரன் ,வைத்தியர் ஜெராட் நிரோசன் , மல்லாவி மத்தியகல்லூரி தேசிய பாடசாலை அதிபர் யேசுதானந்தர் ,திருமதி நிதர்சன் title sponsor of MPL 2022 ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்
மல்லாவி ப்ரீமியர் லீக் போட்டித் தொடர் சம்பியனானது Barathi Raiders
Reviewed by Author
on
May 23, 2022
Rating:

No comments:
Post a Comment