காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னாரில் மாபெரும் போராட்டம்
-குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதியம் 12 மணி வரை பஜார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதோடு,தனியார் போக்குவரத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
-மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலு கொண்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளினால் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
-குறிப்பாக கனிய மணல் அகழ்வினால் எதிர் காலத்தில் மன்னார் தீவு பகுதியில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட உள்ளதோடு,காற்றாலை மின் உற்பத்தியால் மீனவர்களின் வாழ்வாதாரம் எதிர் காலத்தில் முழுமையாக பாதிக்கப்படும் என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த இரு நடவடிக்கைகளையும் உடனடியாக மன்னார் தீவில் நிறுத்தக்கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையின் அழகிய தீவு அரக்கர்கள் பிடியில்,இச் சிறிய தீவின் நிலப்பரப்பில் கனிய மண் அகழ்ந்து இத்தீவு முழுவதுமாக கடலில் மூழ்கடிக்கும் செயல்பாட்டை உடன் நிறுத்து,காற்றாலை மின் கோபுரங்களை அமைத்து மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல்பாட்டை உடன் நிறுத்து,எம்மை உயிருடன் வாழவிடு,ஆர்ப்பாட்டமே எங்கள் வாழ்க்கையா?? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
-போராட்டத்தை தொடர்ந்து கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் ஆகிய வற்றிற்கு எதிராக மக்களிடம் கையெழுத்து பெற்று கொள்ளப்பட்டு,ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னாரில் மாபெரும் போராட்டம்
Reviewed by Author
on
August 29, 2022
Rating:

No comments:
Post a Comment