தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட கடற்தொழிவ் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை (29) காலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
-இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை(12-09-2022) 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு.
Reviewed by Author
on
August 29, 2022
Rating:

No comments:
Post a Comment