அண்மைய செய்திகள்

recent
-

2021 உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்காக ஒதுக்கப்பட்ட திகதிகள்

2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத மாணவர்களுக்காக இம்மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார். 

 பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கு மேற்படி மூன்று நாட்களைத் தவிர வேறு எந்தத் திகதியும் வழங்கப்பட மாட்டாது என அவர் அங்கு வலியுறுத்தினார். 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்திலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021 உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்காக ஒதுக்கப்பட்ட திகதிகள் Reviewed by Author on August 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.