அண்மைய செய்திகள்

recent
-

யாழில் மயக்க மருந்து கொடுத்து ஆட்டோ சாரதியின் மோதிரம் அபகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை!

ஆட்டோவில் பயணித்த இரு நபர்கள் மயக்க மருந்து கொடுத்து ஆட்டோசாரதியின் மோதிரத்தை களவாடி சென்ற சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்.வடமராட்சியில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது : முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த குறித்த நபர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வந்ததும் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி மருத்துவமனைக்குள் சென்று சிறிது நேரத்தில் திரும்பியுள்ளனர். வரும்போது 3 மென்பான போத்தல்களை கொண்டுவந்த அந்த நபர்கள் முச்சக்கர வண்டி சாரதிக்கும் மென்பானத்தை அருந்துமாறு கொடுத்துள்ளனர். 

 பின்னர் பருத்தித்துறை நோக்கி முச்சக்கர வண்டியை செலுத்துமாறு கூறியுள்ளனர். பருத்தித்துறை நோக்கி முச்சக்கர வண்டி சென்று கொண்டிருந்த போது மந்திகை, சிலையடி பகுதியில் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு கூறி வாகனத்தில் வந்தவர்கள் இறங்கி சென்றுள்ளனர். இந்நிலையில்,வீதியில் முச்சக்கர வண்டி நீண்ட நேரம் நிற்பதை கண்ட பருத்தித்துறை பொலிஸார் அதன் அருகில் சென்று பார்த்த போது சாரதி மயங்கிக் கிடப்பதை அறிந்துள்ளனர். பின்னர் அவரை உடனடியாக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.. பின்னர் மேற்கொண்ட விசாரணையின் போது சாரதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கிய பின்னர் அவரின் மோதிரத்தை களவாடி சென்றமை தெரியவந்துள்ளது. பருத்தித் துறை பொலிசார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


யாழில் மயக்க மருந்து கொடுத்து ஆட்டோ சாரதியின் மோதிரம் அபகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை! Reviewed by Author on September 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.