நள்ளிரவில் வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் உஷார் படுத்தப்பட்ட தனுஷ்கோடி கடல் பகுதி: மத்திய, மாநில உளவுத்துறை தீவிர சோதனை:
இந்நிலையில் நேற்று (7) இரவு சுமார் 11 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட காவல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
அதில் பேசிய மர்ம நபர், தனுஷ்கோடி கடல் பகுதியில் 15க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வந்திருப்பதாகவும், அவர்களை அழைத்து வந்த படகோடிகள் அரிச்சல்முனை பகுதியில் இருப்பதாகவும் உடனடியாக வந்தால் அவர்களை கைது செய்து இலங்கை தமிழர்களை மீட்டு செல்லாம் என தெரிவித்துள்ளார். மேலும் அதே மர்ம நபர் மரைன் போலீசாரையும் தொலைபேசியில் அழைத்து இதே போல் கூறியுள்ளார்.
இதையடுத்து தனுஷ்கோடி கடற்கரை பகுதி உஷார்படுத்தப்பட்டு, உடனடியாக மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் போலீஸ் மற்றும் தனுஷ்கோடி காவல் நிலைய போலீசார் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில்; தனுஷ்கோடி அரிச்சல்முனை, தனுஷ்கோடி புதிய பாலம், கோதண்டராமர் கோயில், சேராங்கோட்டை உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் இரவு முழுவதும் இலங்கை தமிழர்கள் மற்றும் படகோடிகளை தேடினர். ஆனால் அந்த தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்டவாறு இலங்கை தமிழர்கள் யாரும் அகதிகளாக தனுஷ்கோடி வரவில்லை என உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது செல்போன் அணைத்து வைக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொலைபேசியில் அழைத்தது யார் என்பது குறித்து செல்போன் எண்ணை கொண்டு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ம நபரின் தொலைபேசி அழைப்பால் இரவு முழுவதும் தனுஷ்கோடி கடல் பகுதி உஷார்படுத்தப்பட்டு மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மரைன் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவில் வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் உஷார் படுத்தப்பட்ட தனுஷ்கோடி கடல் பகுதி: மத்திய, மாநில உளவுத்துறை தீவிர சோதனை:
Reviewed by Author
on
September 08, 2022
Rating:

No comments:
Post a Comment