நுவரெலியாவில் கனரக வாகனம் விபத்து!
பொலன்னறுவையிலிருந்து வெலிமடை, பதுளை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு சென்று கொண்டிருந்த இந்த கனரக வாகனம், செங்குத்தான பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டையிழந்த கனரக வாகனம் வீடொன்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் வீட்டுக்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளது.
இருப்பினும் வீட்டினுள் யாரும் இருக்கவில்லை எனவும் இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
நுவரெலியாவில் கனரக வாகனம் விபத்து!
Reviewed by Author
on
September 06, 2022
Rating:

No comments:
Post a Comment