அண்மைய செய்திகள்

recent
-

திருடர்களுக்காக வைக்கப்பட்ட மின் இணைப்பில் வீட்டின் உரிமையாளரே சிக்கி உயிரிழப்பு.

மண்டபம் அகதிகள் முகாமில் வீட்டில் யாரும் திருடக் கூடாது என்பதற்காக திருடர்களுக்காக வீட்டின் கதவில் வைத்திருந்த மின் இணைப்பை வீட்டின் உரிமையாளரே தொட்டு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(2) காலை இடம்பெற்றுள்ளது. -குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ராமலிங்கம் என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்.

 இந்த நிலையில் ராமலிங்கத்தின் வீடு தனியாக இருந்து வருவதால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை திருடர்கள் யாரும் திருடி சென்று விடக்கூடாது என்பதற்காக அவர் வெளியே செல்லும் போதெல்லாம் வீட்டின் கதவில் சுச் போர்ட்டு மூலம் மின் இணைப்பு வைத்து செல்வது வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் கதவில் மின் இணைப்பு வைத்திருந்ததை மறந்து மின் இணைப்பு வைத்த ராமலிங்கமே அவரது வீட்டின் கதவை தொட்ட போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்டபம் போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருடர்களுக்காக வைக்கப்பட்ட மின் இணைப்பில் அவரை சிக்கி உயிரிழந்த சம்பவம் மண்டபம் முகாம் பகுதி உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது






:
திருடர்களுக்காக வைக்கப்பட்ட மின் இணைப்பில் வீட்டின் உரிமையாளரே சிக்கி உயிரிழப்பு. Reviewed by Author on September 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.