சட்ட ஆவணங்களுக்கு செல்லுபடிக் காலம் வரையறுக்கப்படவில்லை: தலைமை பதிவாளர் திணைக்களம்
பதிவாளர் நாயகத்தினால் விநியோகிக்கப்பட்ட சில சான்றுப்பத்திரங்களின் பிரதிகள் 6 மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் எனவும் அவற்றின் பிரதிகளை எடுத்து வருமாறும் சில அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், அத்தகைய உறுதிப்படுத்தல் தேவையில்லை என திணைக்களம் கூறியுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு, குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்ட ஆவணங்களுக்கு செல்லுபடிக் காலம் வரையறுக்கப்படவில்லை: தலைமை பதிவாளர் திணைக்களம்
Reviewed by Author
on
September 07, 2022
Rating:

No comments:
Post a Comment