கோதுமை மாவுக்கு நிர்ணய விலையை அறிவிக்குமாறு கோரிக்கை
இதேவேளை, கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா 15ஆம் திகதி முதல் தடை விதித்துள்ளது. உள்நாட்டில் கோதுமை மாவின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடரும் வெப்பமான காலநிலையில், இந்தியாவில் கோதுமையின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ள மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்வனவிற்காக ஏற்கனவே கோரியுள்ள நாடுகளுக்கு மாத்திரம், கோதுமை மாவினை ஏற்றுமதி செய்யவதற்கு இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தற்காலிக தடை மாத்திரமாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதிக்கான தடை பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 10 மில்லியன் தொன் கோதுமை மாவினை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
.
.
கோதுமை மாவுக்கு நிர்ணய விலையை அறிவிக்குமாறு கோரிக்கை
Reviewed by Author
on
October 17, 2022
Rating:

No comments:
Post a Comment