சதொசவில் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு
இதன்படி 375 ரூபாயாக இருந்த ஒரு கிலோ மாவின் புதிய விலை 320 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கடவை பருப்புவின் விலை 30 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 285 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 260 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 169 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
1500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ நெத்திலியின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1450 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சதொசவில் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு
Reviewed by Author
on
October 19, 2022
Rating:
Reviewed by Author
on
October 19, 2022
Rating:


No comments:
Post a Comment