பாகிஸ்தான் அரசு மருத்துவமனை கூரையில் 200 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூறியதாவது, “பிணவறை அதிகாரிகளிடம் இந்த உடல்களை விற்கிறீர்களா எனக்கேட்டேன். மருத்துவர்களிடம் சென்று விளக்கம் கோரினேன். ‘இவை மருத்துவ மாணவர்களால் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன என்றனர். பெண்களின் உடல்கள் மறைக்கப்படாமல் நிர்வாண கோலத்தில் கிடந்தன, என்றார்.
நிஷ்தர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். மரியம் அஷ்ரப் கூறுகையில், “இந்த உடல்கள் மாணவர்களால் மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அரசு விதிகளின் படி செயல்படுகிறது,”என்றார்.
பஞ்சாப் மாகாண முதல்வர் பர்வேஸ் இலாஹி இதனை விசாரிக்க சிறப்பு சுகாதார செயலாளர் முஸாமில் பஷீர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு அமைத்துள்ளார்.
விசாரணையை மூன்று நாட்களில் முடிக்க, உடல்களை தகனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உடல்கள் அனைத்தும் கழுகுகளுக்கு தீவனமாக பயன்படுத்த கூரையில் வைக்கப்பட்டன என தகவல் வெளியானது.
இவை தங்கள் பகுதியிலிருந்து காணாமல் போனவர்களின் உடல்களாக இருக்கலாம் என பலுாசிஸ்தான் பிரிவினைவாதிகள் கூறியுள்ளனர் .
பாகிஸ்தான் அரசு மருத்துவமனை கூரையில் 200 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
Reviewed by Author
on
October 16, 2022
Rating:

No comments:
Post a Comment