அண்மைய செய்திகள்

recent
-

சுற்றுலாப் பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை – ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம்

ஊடகங்கள் காட்டுவது போல் இலங்கையில் மோசமான சூழல் இல்லை என்பதால் உலகின் தற்போதைய நிலைவரப்படி முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை என்று ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம் (ACMA) தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அந்தச் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. 

 இலங்கையில் சுற்றுலாத்துறையை விரைவாக மீட்டெடுப்பதற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையிலிருந்து விடுபட இலங்கைக்கு உடனடியாக நிதி மறுசீரமைப்பு வசதிகளை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை – ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம் Reviewed by Author on November 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.