அண்மைய செய்திகள்

recent
-

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

பொது போக்குவரத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. 

 அண்மைய வாரங்களில் ரயில் தாமதங்கள் அவதானிக்கப்படுவதாகவும் எனவே இந்தக் காரணியை கவனத்தில்கொள்ளுமாறு நிறுவனங்களின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இத்தகைய தாமதங்கள் மற்றும் பயணப் பிரச்சினைகள் குறித்து ஊழியர்கள் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்க வேண்டும் என்றும் நிறுவனங்களின் தலைவர்கள் தலையிட்டு இதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அந்த அமைச்சு வலியுறுத்தியுள்ளது.


தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு Reviewed by Author on November 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.