சிறுவனின் உயிரை பறித்த விபத்து
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த இரண்டு பெண்கள், இரு சிறுமிகள் மற்றும் இரு சிறுவர்கள் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அதில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கமுவ பிரதேசத்தில் வசித்து வந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டியின் சாரதி, பின்னால் பயணித்த இரண்டு பெண்கள், இரு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் கல்கமுவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனின் உயிரை பறித்த விபத்து
Reviewed by Author
on
November 08, 2022
Rating:

No comments:
Post a Comment