வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!
குறித்த இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் குணமடைந்துள்ளார்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான ஒருவர் நேற்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த 37 வயதான நபர் என தெரியவந்துள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான உதவிகளை மேற்கொள்ளுமாறு சுந்தரலிங்கம் கிரிதரனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
வியட்நாமிலுள்ள மூன்று முகாம்களில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!
Reviewed by Author
on
November 24, 2022
Rating:

No comments:
Post a Comment