அண்மைய செய்திகள்

recent
-

அரச அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் தொடர்பில் 1905 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடலாம்

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுதல் மற்றும் ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

 அதற்கமைய, 1905 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்களில் இடம்பெறும் இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு துரித தொலைபேசி இலக்கத்தினூடாக அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரச அதிகாரிகள் இலஞ்சம் பெற்றால், அது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறையிட 1954 என்ற துரித தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்த முடியும்.

அரச அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் தொடர்பில் 1905 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடலாம் Reviewed by Author on November 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.