அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஊடகவியலாளர்களுக்கு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக கருத்தமர்வு

அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்த குறைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்தமர்வு மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த ஒருங்கிணைத்தல் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(3) காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.திலீபன் தலைமையில் இடம்பெற்றது. 

 இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டு குறித்த கருத்தமர் வை ஆரம்பித்து வைத்தார். குறித்த கருத் தமர்வில் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக ஊடகப் பிரிவினரும் கலந்து கொண்டிருந்தனர். -குறித்த கருத்தமர்வில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.திலீபன்,மன்னார் மத்தி நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர்,என்.யோகராஜன்,மன்னார் மாவட்ட கடற்தொழில் விரிவாக்கல் உத்தியோகத்தர் பவா நிதி ஆகியோர் கலந்து கொண்டு அனர்த்தம் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் குறிப்பாக ஊடகவியலாளர்களின் பங்களிப்பு குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. உலக தரிசன நிறுவனத்தின் அனுசரனையில் குறித்த கருத்தமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.












மன்னாரில் ஊடகவியலாளர்களுக்கு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக கருத்தமர்வு Reviewed by Author on November 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.