சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச கலாசார விழா மற்றும் மன்னல் நூல் வெளியீட்டு விழா
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமேல் ,சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி அன்னை இல்ல பணிப்பாளர் அருட்தந்தை செபமாலை அன்பு ராசா அடிகளார் ,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பரந்தாமன் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் அவர்களும் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் பிரதேச ரீதியாக பதிவு செய்யப்பட்ட காலா மன்ற பிரதிநிதிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் இறுதியில் கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் மன்னார் பிரதேசத்தில் கலை வளர்ச்சிக்கு பங்காற்றிய 5 கலைஞர்கள் விருந்தினர்களால் கெளரவிக்கப்பட்டது டன் அவர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச கலாசார விழா மற்றும் மன்னல் நூல் வெளியீட்டு விழா
Reviewed by Author
on
December 23, 2022
Rating:

No comments:
Post a Comment