அடை மழையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் :-எச்சரிக்கும் மன்னார் சுகாதாரத்துறையினர்.
மழை காலங்களில் கொதித்து ஆறிய நீரை பருகுவதன் மூலம் நெருப்புக் காய்ச்சல் ,சளி, வயிற்றோட்டம் போன்ற பல தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மேலும் நீர் தேங்கி நிற்கும் இடங்களுக்கு சிறுவர்களை குளியலுக்கு அல்லது விளையாடவோ தண்ணீர் எடுத்து வருவதற்கோ அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாக காலநிலை அவதானிப்பு நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் எச்சரிக்கைகளும் மதிப்பளித்து வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடை மழையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் :-எச்சரிக்கும் மன்னார் சுகாதாரத்துறையினர்.
Reviewed by Author
on
December 23, 2022
Rating:

No comments:
Post a Comment