மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கிவைப்பு
மன்னார் மாவட்டத்தில் கல்வி ரீதியில் ஊக்குவிப்பு தேவைப்படும் 51 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நிதி உதவி வருடம் தோறும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் வழங்கி வைக்கப்படும் நிலையில் 2023 ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவும் மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு பெறும் மாணவர்களின் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வாழ்வுதய மண்டபத்தில் இன்று சனிக்கிழமை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட விவிலிய ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்கலாநிதி கிறிஸ்ரி ரூபன் பெர்னாண்டோ அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக
கிறிஸ்தவ வாலிபர் முன்னனி(YMCA) அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் பிரதிநிதிகள் உத்தியோகஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கிவைப்பு
Reviewed by Author
on
December 03, 2022
Rating:

No comments:
Post a Comment