பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள்; சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
நொச்சியாகம – அரோனாவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மற்றுமொருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி தப்பிச்சென்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைவிட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பொலிஸார், அதன் எரிபொருள் தாங்கியிலிருந்து 4 கிராம் 400 மில்லிகிராம் ஹெராயினையும் கையடக்க தொலைபேசி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள்; சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
Reviewed by Author
on
December 10, 2022
Rating:

No comments:
Post a Comment