கர்ப்பிணி மனைவிக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை செலுத்திய கொடூர கணவன்!
இந்த நிலையில், சரணின் மனைவி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், திருமணத்துக்கு பிறகு நானும் எனது கணவர் சரணும் நல்ல முறையில் குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இதனிடையே கடந்த 2018 ம் ஆண்டுமுதல் எங்களுக்குள் சிறு சிறு பிரச்னை வர ஆரம்பித்தது. அடிக்கடி வரதட்சனை பணம் கேட்டும், ஆண் குழந்தை பெற்று தர வேண்டும் எனவும் அடித்து துன்புறுத்துவார். இதற்கிடையில் நான் கர்ப்பமானேன்.
ஆனால், என் கணவர் சரணுக்கு விசாகப்பட்டணத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணை திருமணம் செய்வதற்காக என்னை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார்.
என்னிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு முறையான காரணத்தை தேடியவர் சமீபத்தில் எனது ஆரோக்கியத்துக்காக சத்து ஊசி போடவேண்டும் என அழைத்துச் சென்று ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தத்தை எனக்கு செலுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் மருத்துவமனையில் மேற்கொண்ட ஒரு மருத்துவ பரிசோதனையில் தான் எனக்கு ஹெச்.ஐ.வி இருப்பதே தெரியவந்தது. எனக்கு வேண்டுமென்றே ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை செலுத்தி, எனக்கும் என் குழந்தையின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திய என் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து சரணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்ப்பிணி மனைவிக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை செலுத்திய கொடூர கணவன்!
Reviewed by Author
on
December 18, 2022
Rating:

No comments:
Post a Comment